ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் ஒன்பது வருடங்கள் அப்படைகள் செய்த பணிகளை மக்கள் கூர்ந்து நோக்குகின்றனர். முப்பதாண்டுகள் முடியாட்சி செலுத்திய ஜனாதிபதி சதாம் ஹ¤ஸைனை அரியாசனத்திலிருந்து அகற்றப் புறப்பட்ட அமெரிக்கா அதை கச்சிதமாகச் செய்து காட்டியது. இந்த மனிதனை ஜனாதிபதி கோலத்திலிருந்து கழட்டி எறிய எத்தனை பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டன. 2003 ஆம் ஆண்டு ஆரம்பமான ஈராக் மீதான படையெடுப்பு 2011 வரை நீண்டுகொண்டே சென்றமைக்கு காரணம் என்ன? அழிவு தரும் ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறப்பட்ட ஈராக் படையெடுப்புக்கான காரணங்களின் உண்மை நிலை என்ன. முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ். பிரிட்டன் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் ஆகியோர் இவ்வாறான காரணங்களை ஏன் சிருஷ்டித்தார்கள். சதாம் ஹ¤ஸைனின் இராஜ்யம் வீழ்ந்த பின்னர் டொனி பிளேயரும் ஜோர்ஜ் புஷ்ஷ¤ம் சித்தரித்த நாசகார ஆயுதங்களை ஈராக்கில் காணக் கிடைக்கவில்லையே! ஏன்? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுபவர்களாக ஈராக்கியர்கள் அலைந்து திரிகின்றனர். இவையாவும் அமெரிக்காவும், பிரிட்டனும் ஆடிய நாடகங்களாக இருக்குமோ என்ற எண்ணமும் ஈராக்கியர்களிடம் இழையோடியுள்ளது. எல்லாம் பிரித்தாளும் தந்திரங்கள். இவ்வாறான தந்திரங்களுக்கு நாம் பலியாகிவிட்டோமே என்று நாணிக் கோணும் மனநிலை ஈராக்கியர்களிடமுண்டு. ஒன்பதாண்டு இராணுவ நாடவடிக்கையில் 2267 பில்லியன் டொலர் செலவாகியுள்ளது. இதைக் கணக்கிட்டுப் பிரித்துப் பார்த்தால் ஒவ்வொரு அமெரிக்கரும் பத்தாயிரம் டொலர் கடனிலுள்ளார்களாம்.
ஈராக் எண்ணெய் வயல்களையும், இயற்கை வளங்களையும் கபZகரம் செய்யவும், ஏப்பமிடவும் புறப்பட்ட அமெரிக்காவுக்கு கையளவு நஷ்டமாம். வொஷிங்டனிலுள்ள பொருளியல் நிபுணர்கள், திறைசேரி அதிகாரிகள் எல்லாம் தலையில் கைவைத்துள்ளனர். கொள்ளை இலாபமீட்டல் நோக்கும் மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்ற பருத்த, கொளுத்த எதிர்பார்ப்புகளும் தலைகீழாய் போய்விட்டது. இதனால் படைகளையும் ஈராக் மீதான கொள்கைகளையும் மாற்ற வேண்டிய நிலையில் அமெரிக்கா இருந்த போதும் ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகி அரசுடன் நெருக்கமான உறவுகளை வைத்துக்கொள்ள அமெரிக்கா விருப்பம் வெளியிட்டுள்ளது.
ஒரு மில்லியன் மக்கள் இந்த ஒன்பதாண்டு போரில் பலியாகியுள்ளதாக ஒரு தகவல். எண்ணிக்கை கூடும் அல்லது குறையும் ஆனால் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுமளவிற்கு போர் உக்கிரமாக நடந்துள்ளது போல. இன்னும் 4805 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளதுடன் 32753 படையினர் காயமடைந்துள்ளனர். ஈராக், ஆப்கான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்கா முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைகள் 9.13 ட்ரில்லியன் டொலரைக் கடனாகப் பெறுமளவிற்கு பொருளாதாரத்தை வாரி இறைத்துள்ளது. இப்போது ஈராக்கில் எஞ்சியுள்ளதை கணக்கிடுவோம். சியா - சுன்னி – குர்திஷ் மோதல்கள், புனரமைப்புக்கள் என்பவையே மீதம். ஈராக்கில் வகுப்புவாத மோதல்கள், பிரிவினை வாதம் என்பவற்றுக்கு நேட்டோ படையிலான படையெடுப்பு வித்திட்டுள்ளது.
மூன்று மில்லியன் சிறுவர்களை தாய் தந்தைகளில்லாத அநாதைகளாக்கியும் ஒரு மில்லியன் பெண்களை விதவைகளாக்கிவிட்டும் அமெரிக்கப் படையினர் ஈராக்கை விட்டு வெளியேறியுள்ளனர்.
இன்னும் மூன்று மில்லியன் பேரை இருப்பிடங்களை விட்டு வெளியேறச் செய்து அகதி வாழ்க்கைக்குள் தள்ளியதும் இரண்டு மில்லியன் பேரை காயங்களுக்குள்ளாக்கியதும் இந்த அமெரிக்க இராணுவம் தலைமையிலான படை எடுப்பே. இத்தனை வடுக்களையும், காயங்களையும், தழும்புகளையும் தடம்பதித்த ஈராக்கின் ஒன்பதாண்டு போர் புகட்டும் பாடம் என்ன. உள்நாட்டு முரண்பாடுகளை வெளிநாடுகள் தீர்த்து வைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தினால் இதுவே விளைவு.
இப்போது ஈரான் ஈராக் இராணுவங்கள் ஒன்றிணைந்து இராணுவ விரிவாக்கத்திற்கு வித்திட்டுள்ளனவாம். மத்திய கிழக்கின் முழு அதிகாரங்களையும் ஷியா இராணுவத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சிகளே இப்போது ஈரானிடமுள்ளது. இதற்கு உடந்தையாக இருக்குமாறு ஈராக்கிற்கு அழைப்பு விடுத்துள்ளது ஈரான். இவ்வாறான நிலைமைகள் எழுந்தால் அருகாமையிலுள்ள சுன்னி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள் என்ன செய்யும் என்பது இதுவரைத் தெரியாமலுள்ளது. அளவுக்கதிகமான இராணுவ பொருளாதார வளர்ச்சியை நோக்கி ஈரான் விரையும் வேளை இது. அண்மையில் நிலத்திலிருந்து கடலுக்கும் கடலிலிருந்து கடலுக்கும் சீறிப் பாயும் ஏவுகணைகளையும் ஈரான் பரீட்சித்துவிட்டது.
காதர் நாசர் என்ற இந்த ஏவுகணைகள் ராடரில் அகப்படாது. சுமார் இருநூறு, 35 கி. மீற்றர் தூர வீச்செல்லையும் கொண்டவை. பெர்ஷிய வளைகுடா இந்தியப் பெருங்கடலுக்குகிடையிலுள்ள ஹர்முஸ் நீரிணையில் இந்த ஏவுகணைகள் பரீட்சிக்கப்பட்டன. வளைகுடா கப்பற் போக்குவரத்தில் ஹர்முஸ் நீரிணை முக்கியமானது. அமெரிக்காவின் யுத்தக் கப்பல்கள் ஹர்முஸ் நீரிணையூடாகவே வளைகுடா நாடுகளுக்குச் செல்கின்றன.
பஹ்ரைனிலிருந்து ஓமான் புறப்பட்டுள்ள அமெரிக்க யுத்தக் கப்பலொன்று மீண்டும் பஹ்ரைன் திரும்பவுள்ளது. வளைகுடாவிலுள்ள அமெரிக்க பெர்சய்ன் கடற்படைத் தளத்திற்குத் திரும்ப வேண்டுமானால் ஹர்முஸ் நீரிணையூடாகவே வர வேண்டும். இந்நிலையில் ஈரான் வீறாப்புடன் அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
அமெரிக்க கப்பல் மீண்டும் தளத்துக்குத் திரும்ப முடியாது. இதை மீண்டும் ஒரு தடவை சொல்ல வேண்டியதில்லை. உறுதியான நிலைப்பாட்டை ஒரு தடவையே சொல்வோம் என்று ஈரானின் கடற்படைத் >மி@தி அற்றொல்லா சாலிஹ் கூறினார்.
இதற்கிடையில் நீருக்கடியில் ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் கப்பலையும் ஈரான் வைத்துள்ளதென்றும் ஒரு கதை. ரஷ்யா அவசரமாக வாயைத் திறந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. எல்லாம் ஈரானைக் கப்பாற்றும் நோக்கில்தான். ஈரானிடம் இவ்வாறான ஏவுகணைகளோ கப்பல்களோ இல்லையென்று சொல்லிவிட்டது ரஷ்யா. இத்தனைக்கும் ஈரானிலுள்ள புஷர் அணு உலை நிலையத்தை நிறுவிக்கொடுத்ததே ரஷ்யாதான்.
ரஷ்யாவின் விஞ்ஞானிகள் வந்துதான் புஷர் அணு உலை நிலையத்தை திறந்து வைத்தார்கள். வளைகுடாவில் சண்டியன் ஈரானா அல்லது அமெரிக்காவா? யார் இதைக் கணிப்பது.
0 commentaires :
Post a Comment