கோரளைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் இருந்து பிரிந்த கோரளைப்பற்று மத்தி கூட்டுறவுச்சங்கம் பல கோரிக்கைகளின் அடிப்படையில் தமது சங்கத்திற்கான சொத்துக்களை மீளக்கோரி கோரளைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் பல வருடங்களாக பிணக்கில் இலுந்து வந்தது. இதன் நிலையை அறிந்து கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் நேற்று இரு சங்கங்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்றினை ஏற்படுத்தி இரு சங்கங்களுக்கிடையிலான பிணக்கிற்கு சுமூகமான தீர்வும் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், ஜவாகிர்சாலி, இஸ்மாயில் மற்றும் கூட்டுறவுச்சங்க தலைவர்கள், மற்றும் ஊழியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment