கிழக்கு மாகாணத்திலே ஓர் அழகிய மாவட்டம் என்றால் முதலில் எல்லோரும் குறிப்பிடுவது மட்டக்களப்புத்தான். மட்டக்களப்புக்கென்று பல தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன. வாவிமகள் ஆட மீன் பாடும் விசேட தனிச் சிறப்பு, ஒல்லாந்தர் ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட கோட்டை, மற்றும் இறங்கு துறை மேலும் இயற்கை அழகு கொஞ்சும் வாவிகள், நீண்ட அழகிய கடற்பரப்பு, பசுமையான வயல் வெளிகள் இயற்கையான நீர் நிலைகள், புராதன ஆலயங்கள், சிறப்பு மிக்க மட்டக்களப்பிற்கே உரித்தான கலை கலாசாரங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், அழகிய பேச்சு தமிழ் என அடிக்கிக் கொண்டே போகலாம்.
எத்தனையோ சிறப்புக்களைக் கொண்டமைந்த இந்த மட்டக்களப்பை இன்று ஒரு அரசியல் வாதி கண் பருவத்தை உயர்த்தும் அளவிற்கு அபிவிருத்தி செய்து வருகின்றார். ஏன் இவரால்தான் மட்டு நகரிலே இவ்வளவு காலங்களும் மாடுகள் படுத்துறங்கிய அந்த பழைய பஸ் தரிப்பு நிலையம் மாற்றப்பட்டு சகல வசதிகளுடன் கூடிய அழகிய மட்டக்களப்பின் எழிலுக்கு மேலும் மெருகூட்டுவதைப்போன்று அருகில் உள்ள அழகிய வாவியை ஒத்தாற்போல் இளம் நீல நிறம் பூசப்பட்டு மிகவும் அழகாக காட்சி தந்தது.
ஆனால் கேவலம் இன்று றைனோ என்கின்ற கூரைதகடு கம்பனியின் விளம்பரத்திற்காக வெறும் 50000ரூபாயினை வைப்பு பணமாக பெற்று விட்டு பேரூந்து நிலையத்தின் முழுப்பகுதியையும் மஞ்சள் நிறத்தால் அசிங்கப்படுத்தி வருகின்றார்கள். பாருங்கள் மட்டக்களப்பின் தனித்துவத்தைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய மாநகர சபை வெறும் பிச்சக் காசு 50000 ரூபாவிற்காக அழகிய பேரூந்து நிலையத்தையே தாரை வார்த்தவர்கள் இனிமேல் எதையெல்லாம் தாரை வார்க்கப் போகின்றார்களோ தெரியல.
எனவே நான் மட்டக்களப்பின்பால் அதிக அக்கறை கொண்டவன் என்ற அடிப்படையில் இந்த செயலை வன்மையாக கண்டிக்கி;ன்றேன்.
உண்மையில் வெறும் 50000ரூபாய் மடடும்; தானா இவர்கள் பெற்றிருப்பார்கள். எனக்கு நன்றாகத் தெரியும் மேயருக்கு எவ்வளவு பிரதிமேயருக்கு எவ்வளவு பாவம் கொமிசினருக்கு அதில் பங்கு இல்லை. இதற்கு அனுமதி வழங்கியவர் கொமிசனர்தான். அவரும் மட்டக்களப்புத்தானே அவருக்காவது இது தெரியலயா?
எவ்வாறாயினும், கிழக்கு மாகாண முதலமைச்சர் மட்டக்களப்பின் அபிவிருத்தியில் அதிக அக்கறை செலுத்துவபவராயின் இந்த விடயத்திற்கு சரியான தீர்ப்பு வழங்க வேண்டும். என்பது மட்டக்களப்பு மக்கள் சார்ந்த எனது பணிவான வேண்டுகோள்.
எவ்வாறாயினும், கிழக்கு மாகாண முதலமைச்சர் மட்டக்களப்பின் அபிவிருத்தியில் அதிக அக்கறை செலுத்துவபவராயின் இந்த விடயத்திற்கு சரியான தீர்ப்பு வழங்க வேண்டும். என்பது மட்டக்களப்பு மக்கள் சார்ந்த எனது பணிவான வேண்டுகோள்.
ஓவ்வொரு மானமுள்ள மட்டக்களப்பானும் இது பற்றி சிந்தித்து தயவு செய்து முதலமைச்சரின் கவனத்தற்கு கொண்டு வந்து அந்த முங்கள் பெயின்ட்டை அகற்றி அழகிய இளம் நீல நிறத்திலான பழைய பேரூந்து நிலையத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும்.
குறிப்பு: மேற்குறித்த பஸ்நிலையத்தை நிர்மாணித்த ஆஞ்சநேயர் கன்ரக்ஸன் ஒரு வருட இறுதியில் பெயின்ட் அடித்து கொடுக்க வேண்டும். அதற்காக அவர்கள் பெயின்ட்டை கொள்வனவு செய்து வைத்திருக்கின்றார்களாம். றைனோ அடித்ததால் அவர்கள் அதை என்ன செய்வார்கள். நான் நினைக்கின்றேன் வருகின்ற தைப் பொங்கலுக்கு மேயர், பிரதி மேயர், கொமிசனர் எல்லாரும் தங்கட வீட்டுககு; அந்த பெயின்ட்டை அடித்தாலும் அடிப்பார்கள் கவனம் மக்களே!
நன்றி
மட்டு நரசிம்மன்!
நன்றி
மட்டு நரசிம்மன்!
மட்டக்களப்பின் மாடுகள் படுத்துறங்கிய பழைய பஸ் தரிப்பு நிலையம்
றைனோவிற்கு தாரை வார்க்கப்பட்ட பின்னர் நிமட்டுபஸ்லையம்
0 commentaires :
Post a Comment