அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தரும் கிழக்கு மாகாண அமைச்சருமான சுபைர் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டி
கேள்வி: அரசுக்கும் தமிழ்க் கூட்ட மைப்புக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தடைப்பட்டுள்ளது பற்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ன கருதுகிறது?
பதில்: பேச்சு வார்த்தையென்று வந்தால் அதில் விட்டுக்கொடுப்புக்கள், மென்மையான போக்குகள், நெகிழ்ச்சித் தன்மைகள் இருக்க வேண்டும். அப்போதுதான் எதிர் பார்க்கும் இலக்கை அடைந்து கொள்ள முடியும். அதற்கு மாறாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு காணி, பொலிஸ் அதிகாரங்கள், வடக்கு, கிழக்கு இணைப்பு என்பவற்றில் விடாப்பிடியாக இருப்பது பேச்சுவார்த்தையில் சிக்கலை ஏற்படுத்தும் செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது. அவர்கள் கோரும் மூன்று விடயங்களும் மிக ஆழமாக ஆராயப்பட வேண்டிய விடயங்களாகும். எடுத்த எடுப்பில் அரசாங்கத்தால் அதற்கு பதில் கூற முடியாது. கடந்த காலங்களில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் இவ்வாறு தான் பிடிவாதமாக செயற்பட்டு பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்டார்கள்.
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤க்கும் இடையில் நடைபெறுவதாகக் கூறப்படும் பேச்சுவார்த்தை பற்றி என்ன கூற விரும்புகிaர்கள்.
பதில்: கூட்டமைப்பு தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு முஸ்லிம் காங்கிரஸை பகடைக்காயாக பயன்படுத்த விரும்புகிறது என்றே கருத வேண்டியுள்ளது. கடந்த முப்பது வருடங்களாக விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்கள் துவம்சம் செய்யப்பட்ட போது, வடக்கிலிருந்து உடுத்த உடையுடன் அனைத்து முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்ட வேளைகளில் ஒரு வார்த்தையேனும் பேசாத கூட்டமைப்பு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களது பாரம்பரிய பிரதேசத்தில் குடியமர்த்த அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்கள் எடுக்கின்ற முயற்சிகளுக்கு தடையேற்படுத்திக் கொண்டு முஸ்லிம்களின் தோள்களிலே கைபோட வருவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.
கேள்வி: முஸ்லிம்களுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்வைக்கும் தீர்வு என்ன?
பதில்: கிழக்கு மாகாண சபை தனித்தே செயற்பட வேண்டும் என்பதில் எமது கட்சிக்கு மாற்றுக்கருத்துக் கிடையாது. வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு ஏனைய மாகாண சபைகளை விட கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களின் விகிதாசாரத்திற்கேற்ப சகல வளங்களும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். குறிப்பாக முடிக்குரிய நிலங்கள், தொழில்வாய்ப்புக்கள், உயர் பதவிகள் என்பவற்றில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். இவ்விடயங்கள் அரசியல் யாப்பின் மூலம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
கேள்வி: வடக்கு, கிழக்கு பிரிந்திருக்கும் நிலையில் முஸ்லிம்களுக்கான தனி அலகுக் கோரிக்கை அள்ளுண்டு போய்விட்டதே?
பதில்: பெருந்தலைவர் அஷ்ரப் வடக்கும், கிழக்கும் இணைந்திருந்த நிலையில் தான் முஸ்லிம்களுக்கான தனி அலகை வலியுறுத்தினார். அன்றைய கால கட்டத்தில் வடக்கும், கிழக்கும் பிரிக்கப்படுவது சாத்தியமற்ற ஒன்றாகக் கருதியதனாலும், இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுப்போன பாதிப்புகளுக்கு நிவாரணம் பெறும் நோக்கிலேயே தனி அலகு பற்றிய கோரிக்கையை வலியுறுத்தினார். அக்கால கட்டத்தில் நிலத் தொடர்பற்ற தனியான அலகு பற்றி அறிஞர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் இருந்த தென்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று கிழக்கு வேறாகவே உள்ளது. கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கையினடிப்படையில் ஒரு முஸ்லிம் முதலமைச்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. இந்நிலையில் தனி அலகு எதற்கு?
கேள்வி: பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைப்பது பற்றி உங்களது கருத்து என்ன?
பதில்: ஜனாதிபதியின் சிந்தனையில் உருவான இவ்விடயத்தை நாம் வரவேற் கின்றோம். ஏக பிரதிநிதிகள் என தங் களைத் தாங்களே பிரகடனப்படுத்திக்கொண்டு ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளை புறந்தள்ளுவதை தவிர்த்து சகல கட்சிகளும் தங்களது கருத்துக்களை முன்வைப்பதற்கும் முரண்பட்ட கருத்துக்களிலிருந்து சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வினை எட்டுவதற்கு இது வாய்ப்பளிக்கும்.
கேள்வி: முஸ்லிம் கட்சிகள் ஒன்று பட்டு செயல்பட வேண்டுமென்று அண் மையில் அமைச்சர் ஹக்கீம் கூறிய கூற்றை எவ்வாறு நோக்குகிaர்கள்?
பதில்: முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப் படுவதன் மூலம் பலமான கோரிக்கைகளை முன்வைக்கலாம். முஸ்லிம்களுக்குள் பல கட்சிகள் உருவாவதற்கு அமைச்சர் ஹக்கீமின் நடவடிக்கைகளே காரணமாக அமைந்தன. தற்போது கூட்டமைப்போடு நடைபெறும் பேச்சுவார்த்தையிலாவது ஏனைய முஸ்லிம் கட்சிகளோடு கலந்துரையாடி அக்கட்சிகளின் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டிருக்கலாம். தனியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டு ஒற்றுமை பற்றிப் பேசுவது வேடிக்கையாகவே யுள்ளது. சரிந்து செல்லும் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கை மூடி மறைக்க மேற்கொள்ளும் முயற்சியென்றே இக்கூற்றை நோக்க வேண்டியுள்ளது.
கேள்வி: தமிழ், முஸ்லிம் ஒற்றுமைக்கு சாத்தியமான தீர்வாக எதனைக் கருதுகிaர்கள்?
பதில்: தமிழ், முஸ்லிம் மக்கள் இன்று ஒற்றுமையாகவேயுள்ளார்கள். சில அரசியல் வாதிகளும், அதிகாரிகளுமே இம்மக்களது ஒற்றுமைக்கு வேட்டு வைக்க முயற் சிக்கின்றனர். வடக்கு, கிழக்கை இணைத்து இரு சமூகங்களினதும் ஒற்றுமையைக் குலை க்க சிலர் முயற்சிக்கின்றனர். இன்னும் சிலர் தனி முஸ்லிம் அலகு என்பதனை பூதாகாரமாகக் காட்டி அரசியல் இலாபம் தேட முயற்சிக் கின்றனர்.
எனவே இரு சமூகங்களின் ஒற்றுமைக்கு சாத்தியமான தீர்வு வடக்கும், கிழக்கும் பிரிந்திருப்பதேயாகும்.
கேள்வி: வடக்கையும், கிழக்கையும் இணைத்து முஸ்லிம்களுக்கு தனி அலகு கிடைக்கப் போவதாக கூறும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் கூற்றுப் பற்றி என்ன சொல்ல விரும்புகிaர்கள்?
பதில்: முதலமைச்சர் சந்திரகாந்தன் கூட்டமைப்பினர் வடக்கையும், கிழக்கை யும் இணைத்து முஸ்லிம்களுக்கென தனியான அலகைக் கொடுக்கப்போகிறார் கள் என்று தமிழ் மக்களை அச்சமூட்டி கூட்டமைப்புக்கெதிராக தமிழ் மக்களை ஒன்று திரட்ட முயற்சிக்கிறார். இதை அவரது தனிப்பட்ட சுய அரசியல் இலாபத்துக்கான கூற்றாகவே கருத வேண்டியுள்ளது.
கேள்வி: அண்மைக்காலத்தில் வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள காணிப்பிரச்சினை சம்பந்தமான தங்களது கருத்து என்ன?
பதில்: இது முக்கியமான கேள்வி வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற ஏழை முஸ்லிம்கள் நொந்து போயுள்ளனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் ஆயுத அச்சுறுத்தல்களினாலும், உயிர்க் கொலைகளினாலும் முஸ்லிம்களின் காணிகள் கபளிகரம் செய்யப்பட்டன. விடுதலைப் புலிகள் தீர்மானித்த நியாயமற்ற மிகக் குறைந்த விலைக்கு முஸ்லிம்களின் காணி உரிமைகள் பறிக்கப்பட்டன. முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழ்ந்த பிரதேசங்களிலிருந்து விரட்டப்பட்டார்கள். புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் அரசியல் வாதிகளினாலும் தமிழ் அதிகாரிகளாலும் முஸ்லிம்களின் சட்டபூர்வ உரிமை உள்ள காணிகள் கூட பறிக்கப் படுகின்றன. காணிப்பதிவேடுகளில் உள்ள முஸ்லிம்களின் பெயர்கள் நீக்கப்படுகின்றன. நியாயம் கோரும் அப்பாவி முஸ்லிம்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளில் பலாத்காரமாக தமிழ்மக்கள் குடியேற்றப்படுகின்றனர். இதற்கு தமிழ் அதிகாரிகள் துணை நிற் கின்றனர். முஸ்லிம்களின் வயல் நிலங்கள் மேய்ச்சல் தரைகளாக பிரகடனப்படுத்தப் படுகின்றன. இவைகளுக்கு மத்தியில் மனிதாபிமான ரீதியில் குரல் கொடுக்க எந்த ஒரு தமிழ் அரசியல் வாதியும் முன்வர வில்லையே என்ற ஆதங்கம் எனக்கிருக்கிறது. அரசாங்கம் இதுவிடயமாக ஆராய்ந்து முஸ்லிம்கள் இழந்து போன காணி உரி மையைப் பெற்றுக்கொடுக்க ஒரு உயர்மட்ட ஆணைக்குழுவை நியமிக்க வேண்டுமென் பதே எனது தாழ்மையான கருத்தாகும்.
கேள்வி: தமிழ் கமூகத்தில் உள்ளது போல முஸ்லிம் சமூகத்திலும் சிவில் சமூக அமைப்பொன்று அவசியமா?
பதில்: இல்லை முஸ்லிம் கட்சிகள் சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. சிவில் அமைப்பு தேவையற்ற முரண் பாடுகளைத் தோற்றுவித்து முஸ்லிம் சமூகத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என நான் கருதுகிறேன்.
0 commentaires :
Post a Comment