1/01/2012

கிழக்கு முதல்வரின் புதுவருட வாழ்த்துச்செய்தி.

மலர்கின்ற புத்தாண்டானது புதுமைகள் படைத்து, புதிய எண்ணங்களை விதைத்து எமது நாட்டிற்கும் எமது மக்களுக்கும் புத்துயிரளித்து புதுயுகம் படைக்கும் நல்லாண்டாக அமைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அனைவருக்கும் புதுவருட நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பது சான்றோர் வாக்கு. நாம் எம்வாழ்வில் ஓர் ஆண்டைக்கடந்து இன்னோர் புதிய ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றோம். இது மகிழ்ச்சியான தருணம் என்ற போதிலும் நாம் சிந்திப்பதற்கும் செயலாற்றுவதற்கும் நிறைய விடயங்கள்  உள்ளன.
‘ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும்  மாண்டோர் மீள்வதுண்டோ’ என்பதைப்போல எம்மை கடந்து சென்ற காலம் திரும்பி வரப்போவது இல்லை. இவ்வுலகில் மிகப் பெறுமதியானது காலம்தான். நாம் கடக்கின்ற ஒவ்வொரு ஆண்டும் எமக்கு மிக பெறுமதிவாய்ந்தவை. அக்காலத்தில் நாம் என்ன செய்தோம். என்பதே மிக முக்கியமானதொன்றாகும். ஓராண்டைக்கடந்து இன்னோராண்டில் காலடி வைக்கும் நாம் எம்மை கடந்து சென்ற ஆண்டில் எம் சமூகத்திற்காக, எம் நாட்டிற்காக செய்தவை என்ன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். நாம் அனைவரும் அதிக பொறுப்புள்ள சமூக பிரதிநிதிகள். பல தசாப்த கால யுத்தம், அழிவுகள், இடப்பெயர்வு, அரசியல்பாகுபாடென்று பல கோணங்களில் நசுக்கப்படும் சமூகத்தில் பிரதிநிதிகளாகிய நாம் சமூகம் சார்ந்து ஆற்றவேண்டிய கடமைகள் பலவுள்ளன.
மலர்கின்ற புத்தாண்டிலே நாம் இதற்காக ஆற்றவேண்டிய பணிகள் என்னவென்று திட்டமிடுவதும், காலத்தை சரியாக பயன்படுத்துவதும் எமது கடமையாகும். மலர்கின்ற புத்தாண்டானது சமூகம் சார்பாக, அரசியல்சார்பாக, சமூகத்தின் தனித்துவம் சார்ந்த நல்லெண்ணங்களை அவர்கள் மத்தியில் விதைக்கப்படும். மீண்டும் எனது புதுவருட நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
சிவநேசதுரை சந்திரகாந்தன்
கிழக்கு மாகாண முதலமைச்சர்.

0 commentaires :

Post a Comment