12/28/2011

வாகரை பிரதேச செயலக கலாசார விழா

வாகரை பிரதேச செயலகத்தின் கலாசார விழா இன்று(27.12.2011) பிரதேச செயலாளர் செல்வி ராகுலநாயகி தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்தார்.
ஒரு சமூகத்தின் வரலாற்றிலே கலாசாரம் எனபது முதன்மை பெறுகின்றது. அந்த வகையிலே ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிகளிலும் அப் பிரதேசத்தினப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கலை கலாசார அம்சங்களை பிரதிபலிக்கும் பொருட்டு வருடார்ந்தம் பிரதேச செயலகங்களிலுள்ள பிரதேச கலாசார பேரவையினால் நடாத்தப்படுகின்ற கலாசார விழா இன்று வாகரை பிரதேச செலயக கலாசார பேரவையினால் நடாத்தப்பட்டது. வுhகரைப் பிரதேசத்திற்கே உரித்தான பல கலை அம்சங்களை பிரதி பலிக்கின்ற கலாசார நிகழ்வுகள் மற்றும் நாட்டுக் கூத்து, வில்லுப் பாட்டு என்பன இடம் பெற்றன. அதிலே வாகை என்கின்ற சிறப்பு மலர் வெளியீடும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வானது வம்மி வட்டவான் வித்தியாலத்தின் சந்திரகாந்தன் கலை அரங்கில் இடம் பெற்றது. இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித்p; தலைவருமான நா.திரவியம் வாகரைப் பிரதேசத்தின் ஆதீனக்குடிகளின் தலைவர், மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகஸ்த்தர் மலர்ச்செல்வன் உட்பட பிரதேச கலைஞர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

0 commentaires :

Post a Comment