12/27/2011

தேசிய பாதுகாப்பு தின பிரதான வைபவம் இன்று காத்தான்குடியில்

தேசிய பாதுகாப்பு தின பிரதான வைபவம் இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு காத்தான்குடியில் நடைபெறவுள்ளது.
பிரதமர் தி.மு. ஜயரட்ன தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, கிழக்கு மாகாண ஆளுனர் ரியர் அட்மிரர் மொஹான் விஜயவிக்ரம, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதரை சந்திரகாந்தன், பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பசீர் சேகுதாவூத் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு ஏழாவது வருடமாக நடைபெறும் இந்த தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான வைபவம் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்திலும் அணி வகுப்பு மரியாதை காத்தான்குடி பிரதான வீதியிலும் நடைபெறவுள்ளது.
இந்த வைபவத்தில் தேசியக் கொடி, மற்றும் கிழக்கு மாகாண கொடி,மட்டக்களப்பு மாவட்ட கொடி என்பன ஏற்றி வைக்கப்படவுள்ளதுடன் சுனாமி உட்பட அனர்த்தங்களினால் உயிர்நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட நேர மௌன அஞ்சலியும் நடைபெறவுள்ளது.
அத்தோடு முப்படை வீரர்களின் அணி வகுப்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் அணி நடை, பேன்ட் வாத்தியம் மற்றும் கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

0 commentaires :

Post a Comment