12/24/2011

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் அலுவலகம்மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடமாற்றம்

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் அலுவலகம் 2012ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடமாற்றப்படுவதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும்  திருகோணமலையில் இந்த அலுவலகம் இயங்கி வந்தது.  கிழக்கு மாகாணத்தின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த பொதுமக்கள் இலகுவாக தமது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இந்த அலுவலகம் இடமாற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.
நேற்றுமுன்தினம் புதன்கிழமை  திருகோணமலையில் நடைபெற்ற கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவை கூட்டத்தில் மேற்படி அலுவலக இடமாற்றம் தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டுள்ளார்.
1989ஆம் ஆண்டு வடகிழக்கென இரு மாகாணங்களும் ஒன்றாக நிர்வாக  ரீதியாக இருந்த காலம் முதல் திருகோணமலையில் மாகாண நீர்ப்பாசன அலுவலகம் இயங்கி வந்தது.

0 commentaires :

Post a Comment