12/06/2011

ஏறாவூர் அறபா வித்தியாலயத்தின் வருடார்ந்த பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள முதன்மைப் பாடசாலைகளுள் ஒன்றாகத் திகழ்கின்ற  ஏறாவூர் அறபா வித்தியாலயத்தின் 2010ம் ஆண்டிற்கான வருடார்ந்த பரிசளிப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.சி.எம்.சயீட் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்கள் கவலந்து கொண்டு மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.
மேலும் இப் பரிசளிப்பு வைபவத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஜவாஹிர் சாலிஹ், ஏறாவூர் நகரசபை முதல்வர் அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல், மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப்பணிப்பாளர் சேகு அலி, மற்றும் கோட்டக் கல்வி அதிகாரி உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கு ஏறாவூர் நகர சபையின் தலைவர் அலிஸாஹிர் மௌலானா பொன்னாடை போற்றி கௌரவித்தார்.

0 commentaires :

Post a Comment