12/21/2011

முதலமைச்சரின் வேண்டுகோளின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் சேவைக்காலம் நீடிப்பு.

கிழக்கு மாகாண முதலமைச்சரும், மாகாண முதலமைச்சரும் உள்ளுராட்சி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் மட்டக்களப்பு மாநகரசபை உட்பட 8 உள்ளுராட்சி மன்றங்களினதும் சேவைக்காலம் 2013 மார்ச் 18 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த  15.12.2011 அன்று கொழும்பில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போது ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் மேற்குறித்த உள்ளுராட்சி சபைகளுக்கான சேவைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் குறித்த உள்ளுராட்சி மன்றங்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி நிருவகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 2012.02.18 உடன் குறிப்பிட்ட உள்ளுராட்சி மன்றங்களின் காலம் முடிவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment