12/05/2011

த.ம.வி.புலிகள் கட்சியின் அரசியல் முன்நகர்வுகள் குறித்த கருத்தரங்கு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் பயிற்சிப் பாசறை இன்று(04.12.2011) கல்குடா தொகுதியில் இடம்பெற்றது. வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் தா.உதயஜீவதாஸ் தலைமையில் பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில்கல்குடா தொகுதியனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் , பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், இளைஞர் யுவதிகள், கட்சியின் தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தனது அரசியல் முன்நகர்வுகளை மக்களுக் ஊடாக மேற்கொண்டு வருகின்றது. அதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக இச் செயலமர்வுகள் அமைந்திருக்கின்றது. கடந்தகாலங்களில் கிழக்குத் தலைமைகள் ஏமாற்றப் படுத்தப்பட்டதன் தாக்கங்கள் அதன் உண்மைத்  தொடர்பாகவும் விரிவாக ஆஸாத் மௌலானா அவாகளால் கலந்துரையாடப்பாட்டது.
அத்தோடு தற்போது கிழக்கு மக்கள் அனுபவித்து வருகின்ற மாகாண சபை முறைமை மற்றும் 13ஆவது அரசியல் திருத்தச் சட்டம் என்பன தொடர்பாக கட்சியின் தலைவரும கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தள் விளக்கங்களை வழங்கினார்.
சமூகத்தற்கு அரசியல் எந்தனவு முக்கியம் என்பாதனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் விளக்கினார், மேலுதம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரம்பம் அதன் சவலால்கள்   தொடர்பா க  முன்னாள் செயலாள் எ.சி. கைலேஸ்வராராஜா விளக்கினார்.

0 commentaires :

Post a Comment