12/31/2011

வறுமையால் கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கு முதலமைச்சர் உதவி

மட்டக்களப்பு மாவட்டத்திலே மிகவும் அதிகஸ்ட பிரதேசங்களை இனங் கண்டு அங்குள்ள வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பல்வேறு உதவிகளைப் புரிந்து வருகின்றார்.
இன்று(30.1.2011) மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குசலானமலை கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கரடியன் குளம் எனும் கிராமத்தில் உள்ள மக்களுடன் நேரில் சென்று உரையாடி, அங்குள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன, அங்குள்ள பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகளையும் வழங்கி வைத்தார்.
மக்களுடனான சந்திப்பில் ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் எஸ் வினோத், செங்கலடி பிரதேசத்தின் வர்த்தக சங்கத்தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்த்தருமான க.மோகன் மற்றும் கிராம சேவையாளர் உட்பட கிராம மக்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment