12/01/2011

அன்று மாகாண சபை முறமையை எதிர்த்தவர்கள் இன்று மாகாணசபையை கைப்பற்ற ஆசைப்படுவது ஏன் – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்.

அன்று மாகாண சபை  மூலம் கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டபோது கிழக்கு மாகாணசபையை வெறுத்தவர்கள், எதிர்த்தவர்கள் இன்று மாகாணசபையை கைப்பற்றுவதற்கு கனவு காண்பதன் நோக்கம் என்ன? இவ்வாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் அவர்கள் மட்ஃமுனைக்காடு விவேகானந்தா வித்தியாலத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே  இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து பேசுகையில்… கடந்த 30 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக எமது கிழக்கு மாகாணம் பாரிய அழிவுகளைச் சந்தித்திருக்கின்றது. இவற்றை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எமக்கிருக்கின்றது. அழிவடைந்த எமது பிரதேசத்தை  கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கோடுதான் கௌரவ முதலமைச்சர் அவர்களும் நாமும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
கிழக்கு மாகாணசபை இலகுவாகக்கிடைத்த ஒன்றல்ல பல உயிர்களைப் பலி கொடுத்துஇ உதிரம் சிந்தி பெறப்பட்துதான் இந்தக் கிழக்கு மாகாசபை. கிழக்கு மாகாணசபையினை கௌரவ முதலமைச்சரவர்கள் பொறுப்பெடுத்தபோது பல சவால்களைச் சந்திக்கவேண்டி இருந்தது. இருந்தபோதும் சவால்களுக்கு நாம் முகம்கொடுத்து அழிவடைந்த எமது பிரதேசத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்றோம்.
கிழக்கு மாகாணசபையினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொறுப்பேற்றபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடுமையாக எதிர்த்தனர். ஆனாலும் முதலமைச்சர் அவர்கள் தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தமிழ் கட்சிகள் ஒற்றுமையுனும் புரிந்துணர்வுடனும் செயற்பட வேண்டும் என்று விரும்பினார். அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு கேட்டபோது நான் கிழக்கு மாகாணசபையை ஏற்றுக் கொள்ளவில்லை கிழக்கு மாகாணசபை என்று ஒன்று இல்லை என்று சொல்லிவிட்டார்.
ஆனாலும் நாம் கிழக்கு மாகாணசபையை பொறுப்பேற்று பாரிய அபிவிருத்தித் திட்டங்களைச் செய்து வருகின்றோம். எமது அபிவிருத்தித் திட்டங்களைப் பார்த்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு கிழக்கு மாகாணசபை ஆசை வந்துவிட்டது. இன்று கிழக்கு மாகாணசபையை தாம் கைப்பற்ற கனவு கண்டுகொண்டிருக்கின்றனர். அன்று கிழக்கு மாகாணசபை என்று ஒன்று இல்லை என்று சொன்னவர்கள் இன்று கிழக்கு மாகாணசபையை கைப்பற்ற கனவு காண்பது நகைப்புக்கிடமானது.
கடந்த காலங்களிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தழிழ் மக்களுக்காக செய்தது என்ன? தழிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்காக என்ன செய்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணசபையை தாம் கைப்பற்றி இடம்பெற்று வரும் துரிதமான அபிவிருத்திகளை இல்லாமல் செய்யவா நினைக்கின்றனர். இன்று அதனைத்தான் செய்து வருகின்றனர்.
அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளில் அதிக தொகை ஒதுக்கப்பட்ட மாகாண சபைகளில் கிழக்கு மாகாணசபை மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை இல்லாமல் செய்யவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நினைக்கின்றனர்.
மக்கள் உண்மைநிலைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்காகவும், கிழக்கின் அபிவிருத்திக்காகவும் யார் பாடுபடுகின்றார்கள் என்பதனை சிந்தித்து மக்கள் செயற்பட வேண்டும். வெறுமனே உணர்ச்சி வார்த்தைகளை நம்பி மீண்டும் எமது மக்கள் அழிவுப் பாதையை நோக்கிச் செல்லக்கூடாது என்றார்.
இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கல்வி அதிகாரிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment