12/10/2011

வரலாற்று சிறப்புமிக்க உகந்தை மலை முருகன் கோவிலுக்கு கிழக்கு முதல்வர் சென்று வழிபாடு.

கிழக்கிலங்கையிலே வரலாற்று சிறப்புமிக்க முருகன் ஆலயமாக உகந்தை மலை முருகன் ஆலயம் பிரதானமாகும். கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக பயணம் செய்யும் பக்தர்கள் குறித்த ஆலயத்தில் தங்கியிருந்து கதிர்காம கந்தனிடம் செல்வது மரபு.
இவ்வாறாக பல்வேறு சிறப்பு மிக்க உகந்தைமலை முருகன் ஆலயத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் சென்று பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டதோடு ஆலயத்தில் திருப்பணிகள் தொடர்பாகவும் பரிபாலனசபையோடு கலந்துரையாடி எதிர்வரும் ஆண்டில் பல்வேறு எதவி வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment