12/10/2011

முதன்முறையாக அக்கரைப்பற்று பாணமை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு கிழக்கு முதல்வர் விஜயம்.

கடந்த யுத்தம் மற்றும் வன்செயல்காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட பாடசாலையாக அக்கரைப்பற்று வலய பாணம அ.த.க. பாடசாலை காணப்படுகின்றது. குறித்த பாடசாலைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இன்று விஜயம் செய்திருந்தார்.
விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர் பாடசாலையின் குறைகளை கேட்டறிந்ததோடு அப்பாடசாலைக்கு 5கணணிகள் மற்றும் பிரதி இயந்திரம் அடங்கலாக கணணி தொகுதியினை வழங்கி வைத்தார். கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுள் மேற்படி பாடசாலை ஒரு எல்லைப்புற பாடசாலையாக அமைந்து இருப்பதனால் அப் பாடசாலையின் அடிப்படைவசதிகள் இன்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி நிலமையை அறிந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் இன்று (09.12.2011) நேரடியாக விஜயம் செய்து அங்குள்ள குறைகளை கண்டறிந்ததோடு பாடசாலை சமூகத்துடன் கலந்துரையாடி பாடசாலை எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு எதிர்வரும் 2012ல் உரிய தீர்வு வழங்கப்படும் என உறுதியளித்ததோடு அங்குள்ள மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்வித்தார்.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன, அக்கரைப்பற்று வலையக்கல்வி பணிப்பாளர் திருமதி திகவதி கணேசமூர்த்தி அம்மையார், கோரளைப்பற்று அதிகாரி, பாடசாலையின் அதிபர் தயாபரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.


0 commentaires :

Post a Comment