மக்களின் ஏகோபித்த தலைவர்கள் எனக் கூறுபவர்களுக்கு இலங்கையின் வரலாறு தெரியவில்லை என்பது உண்மையில் வேதனையளிக்கின்றது. ஒரு சமூகம் கட்டாயமாக தனது நாட்டின் வரலாறு மற்றும் தனது சமூகம் சார்ந்த வரலாறுகளை கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு சமூகம் தனது கடந்த கால பிண்ணனி மற்றும் நடைமுறைகள், எதிர்காலத்தில் தனது சமூகம் பயணிக்கவேண்டிய முறைமைகள் என்பன பற்றி நாம் திட்டமிடுவதற்கும் கட்டாயம் நாம் எமது கடந்த கால வரலாறுகளை கற்றே ஆக வேண்டும். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கற்றுக்கொள்ளவில்லை என்பது வேதனையளிக்கின்றது. என கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்
இன்று (06.12.2011) மட் கருவப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இலவச பாடநூல் விநியோக நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தாh.; தொடர்ந்து அவர் பேசுகையில் அண்மையில் தனது சொந்த ஊரில் இடம்பெற்ற கடினபந்து கிரிக்கெட் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மட்டக்களப்ப பாராளு மன்ற உறுப்பரினா ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அதாவது இலவசக்கல்வி முறையினை எதிர்த்தவர்கள் தமிழ் தலைவர்கள் இல்லை, அப்படி இருந்தால் சொல்லுங்கள் என அவர் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். அவருக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். 1944ம் ஆண்டு ற.ற. கன்னங்கரா அவர்களினால் கொண்டுவரப்பட்ட இலவசக்கல்வி மசோதாவை முதன்முதலில் எதிர்த்தவர்கள் ஜீ.ஜீ. பொன்னம்பலம், மகாதேவா, ஸ்ரீ பத்மநாதன், இவர்களெல்லாம் யார்? தமிழர்களின் தலைவர்கள் இல்லையா? மகாவோ என்பவர் தாங்கள் புகழ்ந்து கொண்டிருக்கும் சேர் பொன்னம்பலம் அருனாச்சலம் அவர்களின் புதல்வர் என்பது தங்களுக்கு தெரியாதோ என்னமோ? இவர்களெல்லாம் இந்து வேளாளர் உயர்குலத்தில் பிறந்த வடக்கு தமிழர்கள் தான். இவர்களின் வழி வந்தவர்கள்தான் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்பதை தன்னால் புரிந்து கொள்ளமுடியாமல் போனதற்காக நான் வருந்துகின்றேன்.
எது எவ்வாறாக இருந்தாலும் இலவச கல்வி முறையினை எதிர்த்த தமிழ் தலைவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூதாதையர்கள் என்பதனை நான் ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்; என அவர் தெரிவித்தார். கடந்த காலங்களில் கிழக்கு மாகாண மக்களை ஏமாற்றிய அந்த தலைமைகளுக்கு இன்றும் வக்காளாத்து வாங்கும் அடிவருடிகள் இருக்கும்வரை எமது மாகணம் உருப்படாது. அவ்வாறானவர்களை இனங்கண்டு எமது மக்கள் அவர்களை துரத்தி விரட்டும் காலம் வெகு விரைவில் வந்து விடும். இனிமேல் எமது மாகாண மக்களை இவர்கள் ஏமாற்ற முடியாது. மக்களுக்கு பக்கபலமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கமட்சி என்றும் இருக்கும் எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஈ போல் உட்பட பல கல்வி அதிகாரிகள் புத்திஜுவிகள, அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும்; கலந்து சிறப்பித்தார்கள்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஈ போல் உட்பட பல கல்வி அதிகாரிகள் புத்திஜுவிகள, அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும்; கலந்து சிறப்பித்தார்கள்.
0 commentaires :
Post a Comment