12/25/2011

சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயர் மாற்றம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர்

ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயரை மாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் எஸ்.வினோத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண அமைச்சரவையின் தீர்மானம் மற்றும் குறித்த கிராம மக்களின் வேண்டுகோள் ஆகியற்றின் காரணமாகவே பெயரை மாற்றும் செயற்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதி அமைச்சர்களான பஷீர் சேகுதாவூத் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் தலைமையில் ஏறாவூர் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது குறித்த கிராமத்தின் பெயரை ஈராக் கிராமம் என மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் எவரும் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என ஏறாவூர் பற்று தவிசாளர் தெரிவித்தார்.
‘இதனையடுத்து நடைபெற்ற எமது பிரதேச சபையின் அமர்வின் போது முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் குறித்த கிராமாத்தின் பெயரை மாற்றம் செய்வது தொடர்பிலான தீர்மானத்தை முன்வைத்தார். இதனை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது’ என அவர் கூறினார்.
இதனையடுத்து குறித்த கிராம மக்கள் என்னிடம் மகஜரொன்றையும் கையளித்துள்ளனர். இதனால் மீண்டும் ஒரு தடவை மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுக்கவுள்ளோம் என தவிசாளர் வினோத் குறிப்பிட்டார்.
அதுவரை குறித்த கிராத்தின் பெயரை மாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment