அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஜவாஹர் சாலிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்
அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர் பதவி ஜவாஹர் சாலிக்கு வழங்கப்பட்டாமை குறித்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிராக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டமைக்காகவே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஹமீட் மேலும் தெரிவித்ததார்
2008ஆம் நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பட்டியலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஜவாஹர் சாலி, அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment