லிப் விஜேசேகர ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.
அனர்த்தங்கள் என்பது திடீரென ஏற்படுகின்ற ஒன்றாகும். ஆகவே மனிதர்களாகிய நாம் அனர்த்தங்களை எதிர் கொள்ள எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் காத்தான்குடியில் (26.12.2011) இடம் பெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், அனர்த்தங்கள் என்பது உண்மையிலே எதிர்பாராமல் இடம்பெறுகின்றதொன்றாகும். எனவே மனிதர்களாகிய நாம் அது விடயத்தில் அதிக அவதானமாக செயற்பட வேண்டும். அனர்த்தம் தொடர்பான அறிவித்தல்களை செவி மடுத்து அதன்படி நடக்க வேண்டும். அனர்த்தங்கள் தொடர்பான அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வோமாயின் பல இழப்புக்களைச் சந்திக்க நேரிடும். உண்மையில் இன்றைய தினமானது ஒரு சோகம் நிறைந்த நாளாக இருக்கின்றது. இலங்கை என்றுமே கண்டிராத ஓர் பேரழிவைச் சந்தித்த இந் நாள் இலங்கையர் ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத நாளாகும்.
இன்றை நாள் ஓர் பாதுகாப்பு தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. இதற்கு உண்மையான காரணம் அனர்த்தங்கள் ஏற்படுகின்ற போது நாம் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்கின்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவதோடு இன்றை தினம் உயிர் நீத்த எம் உறவுகளுக்கு கண்ணணீர் காணிக்கை செலுத்துகின்ற ஓர் நாளாகவும் இது அமைந்திருக்கின்;றது. எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் பிரதம அதிதயாக பிரதமர் தி.மு.ஜயரத்ன ,அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் துலிப் விஜேசேகர ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.
0 commentaires :
Post a Comment