மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்திலுள்ள சந்திவெளி சித்திவியாகர் வித்தியாலயத்தின் வருடார்ந்த பரிசளிப்பு விழா மற்றும் சந்திப்பூ எனும் சஞ்சிகை வெளியீடும் வித்தியாலயத்தின் அதிபர் சிவசுந்தரம் தலைமையில் இன்று 05.12.2011 இடம் பெற்றது. இந் நிகழவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், மாகாணக் கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல், கோறளைப் பற்று பிரதேச சபைத் தவிசாளர் தா.உதயஜீவதாஸ், கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலாளர் தவராஜா மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகள் உட்பட பலபிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
இதில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கலந்து கொண்டு இடையில் விலகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கலந்து கொண்டு இடையில் விலகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment