12/31/2011

காத்தான்குடியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால்  காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்ட பேரணியொன்று இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 8000 மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகளை வழங்கும் திட்டத்தின்கீழ் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வருகின்றது.
எனினும் ஒரு கட்டமாக இன்று காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் வைத்து 700 மாணவர்களுக்கு இலவச அப்பியாசக்கொப்பிகளை வழங்குவதற்கு காத்தான்குடி பிரதேச செயலாளரிடம் அனுமதி பெற்று அதற்கான வைபவம்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இருந்தபோதும் பாடசாலை மாணவர்கள் மற்றும்  நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினர்கள் மாலை 4மணிக்கு இந்த மண்டபத்திற்கு சமூகமளித்தபோது மண்டபம் மூடப்பட்டிருந்ததுடன் மண்டப நுழைவாயிலும் மூடப்பட்டிருந்தது.
இதை கண்டித்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மற்றும் அங்கு சமுகமளித்திருந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலாசார மண்டபத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
சுலோகங்களை தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் ஊர்வலமாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காரியாலயம் வரை சென்று அங்கு பாடசாலை மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகளை மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.
இம் மண்டபத்தில் இந்த வைபவம் நடாத்தப்படக்கூடாது எனவும் காத்தான்குடி நகர சபை தலைவர்  தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நல்லாட்;சிக்கான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளதாக   காத்தான்குடி நகரசபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.
இது தொடர்பாக காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பரிடம் கேட்டபோதுஇ ‘மண்டபத்திற்கான அனுமதியை காத்தான்குடி பிரதேச செயலாளரிடத்தில் இவர்கள் பெற்றிருந்தாலும் என்னிடமும் அனுமதி பெற  வேண்டும்.
இவர்கள் அனுமதி பெறவில்லை. அந்த மண்டபத்திலுள்ள கதிரைகளை பாவிப்பதற்கு நானே அனுமதி வழங்க வேண்டும்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் என்னிடம் அனுமதி பெறவில்லை அத்தோடு எனது காரியாலய நேரம் முடிவடைந்ததால் நான் கதவினை மூடிவிடுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டேன்’ என பதிலளித்தார்.

0 commentaires :

Post a Comment