கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த சில நாட்களாக பெய்து வரும் பெரும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. குறிப்பாக மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூராக அமைந்திருந்தது. இதனை அவதானித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் அவ் இடங்களுக்கு நேரில் சென்று தானே அந்த வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
இன்று(24.12.2011)மட்டக்களப்பு சின்ன உப்போடைப் பகுதியிலே அதிகளவான வெள்ள நீர் தேங்கி நிற்கிறது இதனை வேளியேற்றும் நடவடிக்கையிலே முதலமைச்சர் ஈடுபட்டுள்ளதனைப் படத்தில் காணலாம்.
ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்களால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டதாக தண்ணீருக்குள் நின்று புகைப் படம் மாத்திரம் தான் எடுக்க முடியும். ஆனால் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் வெள்ள நீரை வெளி யேற்றவும் முடியும் என்பதனை அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது மட்டக்களப்பே தாண்டுவிடும் நிலைமைக்கு வந்த போது தனது சொந்த சிந்தனையின் பால் புதிதாக துறைமுகத்தை வெட்டி வெள்ள நீரை கடலுக்குள் செலுத்திய பெருமையும் முதலைமைச்சரையே சாரும்.
0 commentaires :
Post a Comment