மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் விருது வழங்கும் விழா மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தினால் இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 19 பேருக்கு இளைஞர் விருதும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.ஜி.அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பி.பிரசாந்தன்இ தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராஜாஇ தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள்இ இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment