12/27/2011

காத்தான்குடியில் தேசிய பாதுகாப்பு தினம்



இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது அவற்றை எதிர்கொள்வதற்கு சாதி, மத பேதமின்றி அனைவரும் தயாராக வேண்டுமென பிரதமர் தி. மு. ஜயரத்ன தெரிவித் தார்.
காத்தான்குடியில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதமர், இலங்கையில் அனர்த்தங்கள் இரண்டு வகையாக இடம்பெற்றன. ஒன்று யுத்த அனர்த்தம், அதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமது நாட்டில் இல்லாமல் செய்ததன் மூலம் இந்த நாட்டில் அனைத்து இனமும் நிம்மதியாக இன்று வாழ்கின்றன. யுத்தத்தினால் ஏற்பட்ட அனர்த்தம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
நமது நாட்டில் அனைத்து மக்களும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழிசெய்துள்ளார். யாரும் இன்று யுத்தத்தை நினைப்பதில்லை, அதனால் இன்று நமக்கு எந்தப் பயமு மில்லை. அனைவரும் சாதி, மத வேறுபாடின்றி நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றோம். இது நமது பூமி, நமது தேசம் என்ற சிந்தனை நமக்குள்ளது. இதே போன்றுதான் நாம் சந்தித்த இயற்கை அனர்த்தங்களில் மிகப்பெரிய அனர்த்தம் சுனாமியாகும். அதில் இழந்த சொத்துக்கள் இன்று இந்த அரசாங்கத்தினால் ஈடுசெய்யப்பட்டு ள்ளது.
இயற்கை அனர்த்தங்களை உடனடியாக தடுக்கும் திறன் எம்மிடம் இல்லாவிடினும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களை, அழிவுகளை தடுக்கும் திறன் எம்மிடம் இன்று உள்ளது.
இவ்வாறான சவாலையும் இந்த அரசாங்கம் வெற்றி கொண்டுள்ளது. இந்த தேசிய பாதுகாப்பு தினத்தை ஏற்பாடு செய்த அனைவருக்கும் ஜனாதிபதி யின் சார்பிலும் எனது சார்பிலும் நன்றி கூறுகின்றேன். சுமார் முப்பதாயிரத் துக்கு அதிகமான உயிர்களை காவு கொண்ட சுனாமி அனர்த்தத்தையடுத்து அனர்த்தங்கள் தொடர்பாக முன்கூட்டியே செயற்படுவதற் கான முகாமைத்துவ கட்டமைப்பு ஒன்றின் தேவை உணரப்பட்டது.
அந்த அனர்த்தம் காரணமாக டிசம்பர் மாதம் 26ம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப் படுத்தப்பட்டது.
அனர்த்த நிலைமைகள் தொடர்பாக மக்களுக்கு முன் கூட்டியே அறிவிப்பதன் மூலம் மாத்திரமே அவர்களுக்கு தமது உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்வதற்கான வாய்ப்புக்கிடைக் கின்றது. வெள்ளப்பெருக்கு, சூறாவளி, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் மற்றும் எதிர்பாராத அனர்த்தங்களை குறைத்துக் கொள்வதற்காக முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.


0 commentaires :

Post a Comment