மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று வியாழக்கிமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பிரதியமைச்சர்களான பசீர் ஷேகுதாவூத், விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இதன்போது மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன் இவ்வாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இக் கூட்டத்தில் ஆராயப்பட்டன.
0 commentaires :
Post a Comment