கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் கீழ் வருகின்ற அமைச்சுக்களினால் இவ் ஆண்டிற்குள் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக மீளாய்வுக் கூட்டம் இன்று (22.12.2011) திருகோணமலை முதலமைச்சர் செயலகத்தின் கட்டிடத்தில் இடம்பெற்றது.
இதில் மாகாண உள்ளுராட்சி மன்றங்கள், கிராமிய அபிவிருத்தி திட்டங்கள், சுற்றுலா, கல்வி, நீர்ப்பாசனம், மீன்பிடி, வீதி அபிவிருத்தி போன்ற அமைச்சுக்களின் ஊடாக முதலமைச்சரின் நேரடி கண்கானிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. குறித்த அனைத்து வேலைகளும் இவ்வாண்டிற்குள்ளேயே நிறைவு பெறும் என குறித்த அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
இக் கூட்டம் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு பிரதம செயலாளர் வீ.ரி.பாலசிங்கம், முதலமைச்சரின் செயலாளர் எஸ்.அமலநாதன், மற்றும் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள், மற்றும் திணைக்களங்களின் செயலாளர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :
Post a Comment