12/31/2011

'பிரான்ஸின் பிரபாகரன் தபால் முத்திரை' பிழைப்புக்கு வழிதேடி புதிதாய் புலுடா விடும் புலிப்பினாமிகள்

பிரான்ஸில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படங்களைத் தாங்கிய தபால் முத்திரைகள் வெளியிடப்பட்டதாக சில இணையத் தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து பிரான்ஸுக்கான இலங்கை தூதரகம் பிரான்ஸ் அரசாங்கத்திடம் தொடர்பு கொண்டு தமது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
அந்த முத்திரைகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உருவம், தமீழீழ வரைபடம், கார்த்திகைப்பூ மற்றும் விடுதலைப்புலிகளின் சின்னம் ஆகியன இடம்பெற்றுள்ளன.
அந்த முத்திரை பிரான்ஸ் தபால் துறையின் அங்கீகாரத்துடன் வெளியிடப்பட்டதாகவும் குறித்த செய்திகளில் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து தமிழோசையுடன் பேசிய பிரான்ஸ் தூதரகத்தின் இரண்டாவது செயலரான அகமட் ராஸி அவர்கள், இப்படியான முத்திரைகள் வெளியானதாக தமக்கு செய்திகள் கிடைத்ததாகவும், ஆனால் பிரான்ஸின் தபால் சேவையான லாபோஸ்ட் நிறுவனத்துடன் தொடர்புகொண்ட போது அப்படியான முத்திரை எதுவும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்று அவர்கள் கூறியதாகவும் தெரிவித்தார்.
எப்படியிருந்த போதிலும், அப்படியான முத்திரை எதுவும் வெளியாகியிருந்தால், அவற்றை தடை செய்யுமாறு பிரான்ஸ் அரசாங்கத்தை இலங்கை தூதரகம் கேட்டிருப்பதாகவும் அகமட் ராஸி கூறினார்  

0 commentaires :

Post a Comment