12/21/2011

மட்டக்களப்பு மக்களை அவமானப்படுத்தும் செயலை தமிழ் தேசிய கூட்டமைப்பு உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் – கி.மா.ச.உ.பூ.பிரசாந்தன்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனை ஆங்கிலம் பேசத்தெரியாதவர் என்ற காரணத்திற்காக லண்டனுக்கு அனுப்ப முடியாதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய பட்டியல் உறுப்பினர் சுமந்திரன்  மிகக் கேவலமாக அவமானப்படுத்தி ஆங்கிலம் பேசத் தெரியாத உனக்கு லண்டனுக்கு போகவா ஆசை? மானத்தைக் கப்பலேற்ற பிளேனில் பயணம் தேவையா? என மட்டக்களப்பு மாவட்டத்தின் முதன்மை நாடாளுமன்ற உறுப்பினராக மக்களின் அதிகூடிய வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்ற உறுப்பினரை அவமானப்படுத்தியது மிகவும் வேதனைக்குரியது. அவர்களது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் வடக்கு கிழக்கு என்ற பேதங்களும்இ யார் பெரியவர் என்ற போட்டித் தன்மைகளும் அண்மைக்காலமாக கட்சிக்குள் பூதாகரமாக புகைந்து கொண்டிருக்கிறது. அது அவர்களது கட்சிக்குள் பூசலாக இருந்தாலும் மட்டக்களப்பு மக்களின் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினரை ஆங்கிலம் பேசத் தெரியாதவர் எனக் குறிப்பிட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்த மட்டக்களப்பு மாவட்ட மக்களை இழிவுபடுத்தும் செயலாகும்.
அரசியல் தலைவராக வருபவர் ஆங்கிலம் பேசத்தெரிந்தவராகஇ சிங்களம் பேசத்தெரிந்தவராக இருக்க வேண்டும் என்றோ அல்லது இந்த இந்த தகைமைகள் இருக்க வேண்டும் என்றோ இதுவரை வரையறுக்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் பெயர் பட்டியலிடப்படும் போது நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு ஆங்கிலம் தெரியாது என்பது அன்று தெரியவில்லையா? சமூகத்தை வழிநடாத்தியஇ இறந்தும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெரும் தலைவர்கள் பலர் தங்களது தாய்மொழியைத் தவிர ஏனைய மொழி தெரியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். மக்களுக்கு சேவை செய்வதற்கு மொழி அவசியமில்லை. அர்ப்பணிப்பும்இ நேர்மைத்தன்மையுமே உண்மையான அரசியல் தலைமைக்கு இருக்க வேண்டும். இவையெல்லாம் தெரிந்திருந்தும் 62 வருடங்களாக எவ்வாறு மட்டக்களப்பு தமிழர்களை அவர்களது கைக்கூலிகளாக அல்லது சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளைகளாக நினைத்து மடையர்களாக மாற்ற முற்பட்ட மேலாதிக்கத்தின் வெளிப்பாடாகவே இச் செயற்பாடு உள்ளது. வாக்குப்பெறுவதற்கும்இ வெறும் அரசியல் நோக்கத்திற்காகவும் மட்டக்களப்பை சேர்த்துக்கொள்வதும் பின்பு கேலி செய்வதும் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாடிக்கையாகிவிட்டது. அதிலும் வேடிக்கையான விடயம் வெளிநாட்டுப் பயணங்களின் போதும்இ முக்கி;யமான கலந்துரையாடல்களின் போதும் மட்டக்களப்பு தலைமைகளை ஓரம்கட்டுவதும்இ தேவை ஏற்பட்டால் அணைத்துப்பிடிப்பதும்.
தங்களை மேலானவர்கள் என்று காட்டிக்கொள்வதற்காக மட்டக்களப்பு மக்களை அவமானப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இன்று நாடாளுமன்ற உறுப்பினர் கோகேஸ்வரனுக்கு நடந்த நிலைமைதான் நாளை ஏனையவர்களுக்கும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. உங்களது கட்சிக்குள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். வாக்களித்த மக்களை அவமானப்படுத்தும் இச் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இதற்காக மட்டக்களப்பு மக்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குறித்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
 மட்/வில்லியம் மண்டபத்தில் இடம்பெற்ற தொழில் வழிகாட்டல் பயிற்சி நெறியினை முடித்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐ.பீ.எஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருளானந்தம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் பிரதம அதீதியாக கலந்து கொண்டதுடன்இ கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளர் கலாநிதி.அருளானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

0 commentaires :

Post a Comment