முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெண்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டங்கள் பல கிழக்கு மாகாணத்திலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று (16.12.2011); மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்லடி மற்றும் கருவேப்பங்கேணி மாதர் அபிவிருத்தி அமைப்புக்களுக்கு வாழ்வாதார அபிவிருத்திட்டங்களுக்கான நிதி மற்றும் தொழில் உபகரணங்கள் சுயதொழில்களுக்கான கடன்வசதிகள் எனப் பல வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றக் கட்டிடத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மாவட்ட கிராமிய அபிவிருத்திட்டப் பணிப்பாளர் ரகுமான் உள்ளிட் பலர் கலந்து கொண்டார்கள்.
கல்லடி மாதர் அமைப்புக்கு ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் கருவேப்பங்கேணி மாதர் அமைப்புக்கு ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
கல்லடி மாதர் அமைப்புக்கு ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் கருவேப்பங்கேணி மாதர் அமைப்புக்கு ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 commentaires :
Post a Comment