12/20/2011

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களின் பின்னணி என்ன?

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் யார்? அவர் களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? அவர்களின் பின்னணி என்ன? என்பது தொடர்பான விசாரணையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
அணு உலைக்கு எதிராக அன்னிய சக்திகள் செயல்படுகிறது என்ற சந்தேகமும் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
6 அமைப்புகள் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட 6 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்தான் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியில் உள்ளன. இவர்கள்தான் மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே இந்த நிறுவனங்களின் பின்னணி குறித்த விசாரணை முடுக்கி விடப் பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக இந்த என்ஜிஓக்கள் வெளிநாட்டில் இருந்து பெறும் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது தொடர்பாக விளக்கம் கேட்டு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பணம் இந்த என்.ஜி.ஓக்கள் தூத்துக்குடியை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன. எனினும் எந்த எந்த அமைப்புகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என்பது பகிரங்கமாகத் தெரிவிக்கப்படவில்லை.
எனினும் எந்த எந்த நாடுகளிடம் இருந்து அவர்கள் பணம் பெறுகிறார். எந்த பணிகளை நடத்த இப்பணத்தை பெறுகிறார்கள். வெளிநாட்டு பங்களிப்புச் சட்டத்தின் கீழ் பெறப்படும் இந்தப் பணம் எவ்விதம் செலவிடப்படுகிறது என்பது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

0 commentaires :

Post a Comment