12/07/2011

மட/ கருவேப்பங்கேணி விபுலாநந்த வித்தியாலயத்தின் முப்பெரும் விழா

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள மட்டு புறநகர்ப் பாடசாலைகளுள் ஒன்றாக திகழ்கின்ற மட்/ கருவேப்பங்கேணி வித்தியாலயத்தின் வருடார்ந்த பரிசளிப்பு விழா,கேணி சஞ்கிகை வெளியீடு, பொன்விழா என மூன்று முக்கிய விழாக்களை உள்ளடக்கியதான முப்பெரும் விழா வித்தியாலயத்தின் அதிபர் க.மனோராஜ் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஈ. போல், மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் திருமதி எஸ.;பவளகாந்தன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், ஏனைய கல்வி வலயங்களின் பணிப்பாளர்கள் கல்வி அதிகாரிகள் மதப் பெரியார்கள் உட்பட பல பிரமுகர்களும் கலந்து சிறப்பிதத்தார்கள்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைப்பதனையும் வித்தியாலயத்தின் அதிபர் பொன்னாடை போற்றி முதலமைச்சரை கௌரவிப்பதனையும் பாடசாலை மட்டத்;தில் இடம் பெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வில் சைக்கிள் ஓட்டப் போட்டியில் 1ம் இடங்களைப் பெற்ற மாணவ மாணவியர்க்கு தன்னால் அன்பளிப்பு செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை பரிசாக வழங்குவதனையும் அதே வேளை இப் பாடசாலையிலிருந்து 2011ம் ஆண்டு நடைபெற்ற 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்iயில் சித்திடைந்து மட்டக்களப்பு கல்வி வலயத்திலே 3ம் இடத்தையும் மட்டக்ளப்பு மாவட்டத்திலே 17ஆவது இடத்தையும் பெற்ற மாணவி தர்சிகா அவர்களுக்கு வீடடிற்கொரு பட்டதாரி என்ற தனது சிந்தனைக்கு உரமூட்டிய அந்த மாணவிக்கு தனது நினைவுப் பரிசினை வழங்கி கௌரவிப்பதனையும் படத்தில் காணலாம்.

0 commentaires :

Post a Comment