தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் பயிற்சிப் பாசறை இன்று(17.12.2011) பட்டிருப்பு தொகுதியில் இடம்பெற்றது. த.ம.வி.பு கட்சியின் பட்டிருப்பு தேர்தல் தொகுதி பிரதேச அமைப்பாளர் மணிவண்ணன் தலைமையில் களுவாஞ்சிக்குடி ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தனது அரசியல் முன்நகர்வுகளை மக்களுக்காக மேற்கொண்டு வருகின்றது. அதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக இச் செயலமர்வுகள் அமைந்திருக்கின்றது.
அத்தோடு தற்போது கிழக்கு மக்கள் அனுபவித்து வருகின்ற மாகாண சபை முறைமை மற்றும் 13ஆவது அரசியல் திருத்தச் சட்டம் , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உருவாக்கம் என்பன தொடர்பாக கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன் அவர்கள் விளக்கங்களை வழங்கினார்.
. இந் நிகழ்வில் பட்டிருப்பு தொகுதியனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் ,பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் , இளைஞர் யுவதிகள், கட்சியின் தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :
Post a Comment