12/31/2011

சிவபுரம் கிராம மக்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடல்

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மயில்பாவெளி கிராமத்தின் எல்லையிலுள்ள சிவபுரம் கிராமத்திற்கு இன்று(30.12.2011) கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் தொடர்பாக கலந்துரையாடி அதற்கான எற்பாடுகளை செய்ததோடு, அங்குள்ள வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் எஸ.;வினோத் , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்த்தர் க.மோகன் உட்பட கிராம மக்கள் கிராம அபிவிருத்தி சங்க உறுபபினர்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment