வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்று தமிழ்க் கூட்டமைப்பினர் கூறுகின்றனர். இணைவதால் கிழக்கு மாகாணத்திற்கு என்ன இலாபம் என்று அவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.
பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தில் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு தொழில் முயற்சிப் பொருட்களும் தொழில் முயற்சிக்கான காசோலைகளும் வழங்கும் நிகழ்வு பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
வடக்கும் கிழக்கும் தனித் தனியாக இருப்பதால் இரண்டு மாகாணங்களுக்கும் இரண்டு முதலமைச்சர் வருவர். அவ்வாறு இல்லாமல் தமிழ் கூட்டமைப்பினர் கூறுவது போல் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதால் ஒரு முதலமைச்சர் வருவார். அதனால் கிழக்கில் முதலமைச்சர் இல்லாமல் போகும் என்ற நப்பாசையில் கூட்டமைப்பினர் செயல்படுகின்றனர். கிழக்கை எப்போதும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரே ஆளவேண்டும் நாம். இன்னும் இன்னும் அடிமைகளாக வாழக் கூடாது என்றும் கூறினார்.
கோறளைப்பற்று பிரதேச செயலகமும்இ கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து இந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தன.
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது, பேத்தாழை தெற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், வாழைச்சேனை தமிழ் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், பாசிக்குடா மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், என்பவற்றுக்கு பதினாறு லட்சத்தி ஐம்பத்தேழாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களும் காசோலைகளும் வழங்கப்பட்டன.
0 commentaires :
Post a Comment