கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் எட்டாவது ‘வெளி’ சஞ்சிகை வெளியீடும் 2011 வெளி சஞ்சிகையின் இதழாசிரியர் ஜெகதீசன் கோபிநாத்தினால் வடிவமைக்கப்பட்ட www.historian.tk (வரலாற்றை அறிய ஒரு வலைப்பு) என்ற வலைப்பூ அறிமுக விழாவும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கலைப்பீட விபுலானந்தர் கலையரங்கில் நடைபெற்றது.
‘வெளி’ சஞ்சிகைக்கான வெளியீட்டுரையை நுண்கலைத் துறைத் தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில், பேராசிரியர் சி.பத்மநாதன், கலைப்பீடத்தின் பதில் பீடாதிபதி, பல்கலைக்கழக நூலகர் திருமதி அருள்நந்தி, துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், சிரேஸ்ட மாணவர் ஆலோசகர் ஜோன்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment