12/11/2011

மட்டக்களப்பு மாவட்டத்தின் அறிவுப்புரட்சியில் மாபெரும் மைல்கல் பேத்தாழை பொது நூலகம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அறிவுப்புரட்சியில் ஓர் மாபெரும் மைல்கல் பேத்தாழை பொதுநூலகம் என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். இன்று(10.12.2011) பேத்தாழையில் நிர்மானிக்கப்பட்ட பொதுநூலகத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் கிழக்கு மாகாணம் தற்போது கல்வியில் மாத்திரமின்றி ஏனைய துறைகளிலும் அபிவிருத்தி கண்டு வருகின்றது. ஏனைய துறைகள் வளர்ச்சி கண்டாலும் கல்வி வளர்ச்சிதான் ஓர் நலிவடைந்த மற்றும்  பாரிய இழப்புக்களை எதிர்நோக்கிய எமது கிழக்கு மாகாண மக்களுக்கு கல்வி அபிவிருத்தி என்பது ஓர் இன்றியமையாததாகும்.
எனவே இதனை கருத்திற்கொண்டுதான் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே இதுவரைக்கும் ஓர் பெரிய அறிவுப்பெட்டகம் பேத்தாழை பொது நூலகத்தை அமைத்திருக்கின்றது. எனவே எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாணம் கல்வி வளர்ச்சியிலே முதலிடம் பெற வேண்டும். அதற்கு ஓர் ஆரம்ப செயற்பாடாகவும் இந்த நூலகத்தின் செயற்பாடு அமையும் எனவும் நான் எண்னுகின்றேன் என முதல்வர் சி.சந்திரகாந்தன் அவர்கள் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 4கோடி ருபா செலவில் மேற்படி நூலகம் அமையப்பெற்றிருக்கின்றது. இன்று இந்த நூலகமானது மக்களின் பாவனைக்காக  உத்தியோக பூர்வமாக கோரளைப்பற்று பிரதேசசபையிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுணர் றியல் அட்மிரல் மொகான் விஜேவிக்ரம, உள்ளுராட்சி மாகாணசபை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெவ்வை, எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வீ.ரி.பாலசிங்கம், பிரதி பிரதம செயலாளர்கள், முதலமைச்சரின் செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட  உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். மேற்படி நிகழ்வு கோரளைப்பற்று பிரதேசசபை தவிசாளர் தா.உதயஜீவதாஸ் தலமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment