ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயரை ஈராக் கிராமம் என பெயர் மாற்றப்பட்டதை இரத்து செய்துள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் எஸ்.வினோத் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரதேச சபையின் மாதந்த கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து ஏறாவூர் நகர பிரதேச செயலாருக்கு கடிதம் மூலம் அறிவிக்கவுள்ளதாகவும் தவிசாளர் வினோத் தெரிவித்தார்.
பெயர் மாற்றப்பட கூடாது என கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானித்தமையினாலும் குறித்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தமையினாலு ம் இப்பெயர் மாற்றத்தை இரத்து செய்ததாக மேலும் குறிப்பிட்டார்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயரை ஈராக் கிராமம் என மாற்றறுவது என தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment