மட்டக்களப்பிலிருந்து மாத்தறை வரையிலான சைக்கிளோட்டப் போட்டி இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு முன் ஆரம்பமானது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் இப்போட்டியின் ஆரம்ப வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்இ கிழக்கு மாகாண சுகாதார இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டதரணி லலித் டியும் பெரேரா, மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், கிழக்கு மகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள், படை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பிலிருந்து மாத்தறை வரையிலான ஒரு போட்டியும் மட்டக்களப்பிலருந்து அம்பாறை வரையிலுமான போட்டியாக இப்போட்டி நடைபெறுகின்றது.
படை வீரர்கள்இ பொலிஸார் என 300க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் இப்போட்டியில் பங்கு பற்றியுள்ளனர்.
மாத்தறை வரையான போட்டி நாளை மறுதினம் சனிக்கிழமை மாத்தறையில் நிறைவு பெறவுள்ளது
0 commentaires :
Post a Comment