கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அயராத முயற்சியின் பயனால் புதிதாக உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமானது இன்று(07.12.2011) 2011ம் புலமைப் பரிசில் பரீட்சையிலே சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கொக்கட்டிச் சோலையில் இடம்பெற்றது.
மட்டு மேற்கு வலயக் கல்வி பணிப்பாளர் க.பாஸ்கரன் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழவில் கல்வி வலயத்தின் ஸ்தாபகரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இந் நிகழவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், பிரதிக் கலிவிப் பணிப்பாளர் ஞா.க.சிறிநேசன், கோட்டக் கல்வி அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் ஊர் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
0 commentaires :
Post a Comment