12/06/2011

கிழக்கு மாகாண விலை மதிப்பீட்டு திணைக்கள தலைமையக கட்டிடம் திறப்பு

முதற் தடவையாக கிழக்கு மாகாணத்திற்கான  விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பிராந்திய காரியாலயம் மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர்விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஇலங்கை விலை மதிப்பீட்டு திணைக்களத்தின் பிரதம விலை மதிப்பீட்டாளர் பி.டபிள்யு.செணாரத்தின உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இதன் பிராந்திய காரியாலயத்தை திறந்து வைத்தனர்.
இதன்போது இவ்வலுவலகம் திறந்துவைக்கப்பட்டதுடன் நினைவு பலகையும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி இவ்வலுவலகம் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment