w.w.கன்னங்கரா 1944ம் ஆண்டு கொண்டுவந்த இலவசக் கல்வி மசோதாவினை முதன் முதலில் எதிர்த்தவர்கள் அப்போது தமிழ் மக்களின் மாபெரும் தலைவர்கள் என கூறிக் கொண்டிருந்து யாழ் மேலாதிக் இந்து வேளாளர் குலத்திலதைச் சார்ந்த ஜி.ஜி. பொன்னம்பலம் , சேர் பொன் அருணாச்சலத்தின் புதல்வர் மகாதேவா மற்றும் சிறிபத்மநாதன் ஆகியோர்தான் அதனை முதன் முதலில் எதிர்த்தவர்கள்.
இதற்கு உண்மைக் காரணம் என்னவெனில் ஏனைய சாதியில் குறைந்த மக்கள் கல்வி அறிவைப் பெற்றுவிடக் கூடாது என்ற சாதி வெறிப் போக்கே இதுவாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.நல்லையா மாத்திரமே இத்திட்டத்தை ஆதரித்தாகவும் அவர் கூறினார்.
வாழைச்சேனை பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலயத்தின் முதலாவது மாணவர் ஊக்குவிப்பு விழா பேத்தாளை குகநேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றபோதே முதலமைச்சர் சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
“இலவசக் கல்வியை ஏன் எதித்தார்கள் என்றால் நம்மில் படித்தவர்கள் வரக் கூடாது என்பதற்காகதான். இன்று இலவசக் கல்வி முறைமை வந்ததன் காரணமாகத்தான் நமது பிரதேச பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள். இலவசக் கல்வி இல்லையென்றால் அதிகமானவர்கள் கற்கமாட்டார்கள்.
ஆரம்பத்தில் அதிகமான கல்வியியலாளர்கள் உருவாகாததற்குக் காரணம் எங்களுடைய பகுதி கல்வியில் வளர்ச்சி அடையவில்லை என்பதே. அதை சாதகமாகப் பயன்படுத்தி யுத்தத்திற்கு ஆள் எடுக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டது.
கல்வி அறிவு குறைந்த மக்களை மிக விரைவாக உணர்ச்சிவசப்படுத்த முடியும். ஆக்ரோசமான எண்ணங்களை சொல்லி மிக விரைவாக துப்பாக்கி தூக்க வைக்க முடியும் என்று எமது தமிழ் தலைவர்கள் நினைத்தார்கள். இதுதான் கடந்த காலங்களில் நமது அரசியல் தலைமைகள் மக்களுக்குச் செய்த சேவை. இதை இன்றைய சமூகம் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஜீ.ஜீ. பொன்னம்பலத்துடன் சேர்ந்து அரசியல் செய்தவர்தான் தந்தை செல்வா. இப்படியான வரலாறுகள் தெரியாமல் தமிழரசுக் கட்சி நல்ல கொள்கையுடன் வந்த கட்சி என்று கூறிக் கொண்டு இன்னும் இன்னும் மக்களை ஏமாற்ற நினைப்பது கவலையான விடயம்” என்றார்.
0 commentaires :
Post a Comment