12/03/2011

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மக்கள் மயப்படுத்தும் செயற்பாடு தீவிரம்

 
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை மக்கள் மயப்படுத்தும் செயற்பாடு தற்போது கிழக்கு மாகாணத்திலே தீவிரம் அடைந்து வருகின்றது. அதாவது கிழக்கு மாகாணத்தில்; உள்ள ஒவ்வொரு பிரதேசங்களிலும் கட்சி தொடர்பான விழிப்புணர்வு மற்றும் செயலமர்வுகளை நடாத்தி வருகின்றது. அந்த வகையில் நாளை (03.12.2011) மட்டக்களப்பு நகர் பகுதிக்கான செயலமர்வு மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் கட்சியின் தலைவர் சி. சுந்திரகாந்தன் தலைமையில் இடம் பெறும். இதில் பல்வேறு புத்திஜீவிகள், கட்சியின் ஆயுட்காலத் தொண்டர்கள், கட்சியின் முக்கியஸ்த்தர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள் உட்பட பலர் கலந்து கொள்வார்கள்.

0 commentaires :

Post a Comment