மட்டக்களப்பு, பார் வீதியில் இன்று வியாழக்கிழமை நன்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மோட்டர் சைக்கிளில் சென்ற நபர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் ஸ்தளத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த மாரிமுத்து ரகுநாதன் (வயது 67) என்பவர் இவ்விபத்தில் உயிரிழிந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 commentaires :
Post a Comment