தேசிய உயர் கல்வி நிறுவகத்தின் மட்டக்களப்பு மாவட்ட எச்.என்.டி.ஏ 4ம் வருட மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
நிறுவகத்தின் மாணவர் சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்இ தேசிய உயர் கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் திருமதி.முத்துலட்சுமி மற்றும் விரிவுரையாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிறுவகத்தில் 4வருட பயிற்சி நெறியை பூர்த்தி செய்த சுமார் 60 மாணவர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
தேசிய உயர் கல்வி நிறுவகம் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியின் ஒரு பகுதியிலேயே பல வருடங்களாக இயங்கிவந்தது.
0 commentaires :
Post a Comment