சுமார் 70 வருடங்களுக்குப் பின்னர் யாழ் குடாநாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்ட செலவீனங்களுக்காக 2012 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தில் 21 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
இரணைமடுக் குளத்திலிருந்து யாழ் குடாநாட்டின் மூலை முடுக்கு எங்கிலும் குழாய் மூலம் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவிருப்ப தாகவும் அமைச்சர் தினேஷ் கூறினார்.
நாட்டின் ஏனைய இடங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கிற்கான நீர்வடிகாலமைப்பு முறைமை சீரானது ஆகையால் அப்பகுதிக்கான நீர்விநியோகத் தினை இலகுவாக முன்னெடுக்க முடியும். எனவே, சுமார் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்குள் இத்திட்டத்தை பூரணமாக்குவதன் மூலம் குடாநாட்டு மக்களுக்கு குழாய் மூலமான சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்க முடியுமென நம்புகிறோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
குடாநாட்டுக்கு சுத்தமான குடிநீரை குழாய் மூலம் பெற்றுக்கொடுக்கும் அதே நேரம், யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் நிலக்கீழ் நீருடன் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையிலான செயற்திட்டமும் இணைந்து முன்னெடுக்கப் படுமெனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணத்துக்கான நீர் வழங்கலில் கூடுதல் கவனம் செலுத்து இருக்கும் அரசாங்கம், குடாநாட்டின் கழிவுநீர் அகற் றும் செயற்பாடுகளிலும் அதிகம் அக்கறை செலுத்தியுள்ளது.
கழிவுநீர் அகற்றும் முறை மையினை முன்னேற்றுவதற்காகவும், அமைச்சு பல்வேறு திட்டங்களை வகுத்துள் ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்த நீர் மானியம் 2012 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்துக்கு அமைய தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இதில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது. அத்துடன் கடந்த மூன்று வருடங்களாக அதில் அதிகரிக்கப்படாத தண்ணீர் கட்டணத்தை அதிகரிக்கும் நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
2011 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு அமைச்சுக்கென ஒதுக்கப்பட்டிருந்த 29 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி 2012 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் 33 ஆயிரம் மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீர் அனைவருக்கும் அத்தியாவசியமான தொன்று, அனைத்து மக்களுக்கும் சுத்த மான குடிநீரைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது விருப்பமாகும். எனவே, ஜனாதிபதி இந்த அமைச்சின் ஊடான செயற்பாடுகளுக்கு அதிக ஆர்வம் காட்டியுள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆயிரம் லீற்றர் நீர் விநியோகத்துக்கு எமக்கு 37 ரூபா செலவாகிறது. இருப் பினரும் சமுர்த்தி நன்மை பெறு வோருக்கு நாம் 1.50 ரூபாவுக்கே விற்பனை செய்கிறோம்.
அத்துடன் வீடமைப்பு திட்டங்களில் வசிப்போருக்கும் மானிய அடிப்படையில் 3 ரூபா வீதமே நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் எந்தவொரு மாற்றமும் இல்லை. இம்மானியங்கள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்றார்.
உண்மையில், பழைமையான நீர் வடிகாலமைப்பு முறைமையினாலேயே 60 தொடக்கம் 70 சதவீதமான சுத்தமான குடிநீர் கசிந்து வீணாகிறது.
அதனை குறைத்துக் கொள்வதற்காக கொழும்பில் மாத்திரம் அடையாளம் காணப்பட்ட 150 பழைய நீர் வடிகாலமைப்புக்குள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
அவுஸ்ரேலியா, நெதர்லாந்து, ஸ்பெயின், ஒஸ்ரியா, கொரியா ஆகிய நாடுகளும், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜெய்கா ஆகிய அமைப்புக்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு முறைமையினை சீர்செய்வதற்காக அரசாங்கத்துக்குப் பாரிய நிதியுதவியினை செய்துவருகின்றன.
2012 முதல் 2014 ஆம் ஆண்டுவரை அமைச்சின் கீழ் பல்வேறு செயற்திட்டங் களை முன்னெடுப்பதற்காக 164 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் நூறு நடுத்தர மற்றும் கிராமிய நீர்வழங்கல் செயற்திட்டங்கள் மற்றும் 3 ஆயிரத்து 700 சமூக அடிப்படையிலான நீர்வழங்கல் செயற்திட்டங்களும் முன்னெடுக்கப் படவுள்ளன.
அதற்கு, மேலதிகமாக கழிவுநீரை தூய நீராக்குதல் கடல் நீரை குடிநீராக்குதல் ஆகிய செயற்திட்டங்களுக்காகவும் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
0 commentaires :
Post a Comment