அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறுவதற்காக படகில் 380 பேர் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக படகு கடலில் மூழ்கியதில் 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மற்றவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை.
ஆப்கானிஸ்தான், துருக்கி, ஈரான், சவூதி அரேபியாவை சேர்ந்த 380 பேர் அவுஸ்தி ரேலியாவில் குடியேற சட்டவிரோதமாக சென்றுள்ளனர்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவு அருகில் சென்று கொண்டிருந்த போது பலத்த காற்றின் காரணமாக படகு கடலில் மூழ்கியது. இதுகுறித்து இந்தோனேசிய அதிகாரிகள் கூறுகையில் நூறு பேர் செல்லக்கூடிய படகில் 380 பேர் பயணம் சென்றுள்ளனர். பாரம் தாங்காமல் கடலில் படகு மூழ்கி உள்ளது. மூழ்கியவர்களில் 76 பேர் மட்டும் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்றனர்.
0 commentaires :
Post a Comment