11/04/2011

எப்பொருள் யார் யார் வைக்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

 
பேச்சுவார்த்தைகளைக் கைவிட்டு அரசாங்கம் உடனடியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைக் கைது செய்ய வேண்டும். இவ்வாறு இனவாதக் கட்சியான  ஜாதிக ஹெல உறுமய கூக்குரலிடுகின்றது.
உள்நாட்டில் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகளை நடத்துவது போன்று பாசாங்கு செய்து விட்டு வெளிநாடுகளுக்குச் சென்று அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களையும் பரப்பி விட்டு அதோடு நிற்காமல் தமிழீழத்திற்கு ஆதரவாக பிரச்சாரங்களைச் செய்யும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக அரசாங்கம் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு இலங்கையின் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முக்கிய பிரமுகரும், ஊடகப் பேச்சாளருமான நிசாந்த தெரிவித்துள்ளார் என எமது கொழும்புச் செய்தியாளர் அறிவித்துள்ளார்.
அதி கூடிய வகையில் இனவாத்தை தெற்கில் பரப்பும் நோக்கோடு அவரது கருத்துக்கள் அமைந்துள்ளதாகவும் நமது செய்தியாளர் மேலும் குறி;ப்பிட்டுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் நிதிசேகரிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.
முன்னர் விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் நிதி சேகரிப்பைச் செய்து நாட்டுக்குள் பல சேதங்களை விளைவித்தனர். அவர்களின் ஆயுதப் பிரிவினை தற்போது முடிவிற்கு வந்துள்ளது.
தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அரசியல் பிரிவினையை ஏற்படுத்த முயலுகின்றனர். அவர்கள் கூட வெளிநாடுகளில் நிதியை திரட்டி வந்து இங்கு அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை நடத்த முயலுகின்றனர்.
தங்களிடம் உள்ள நிதிப்பலத்தால் அவர்கள் தமிழ் மக்களை பிழையான வழியில் இட்டுச் செல்லவுள்ளார்கள். இதை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது.
மேலும் வெளிநாடுகளுக்கு செல்லும் சம்பந்தன் போன்ற தலைவர்கள் அரசாங்கம் தமிழர் பிரதேசங்களில் சிங்களவர்களை குடியேற்றுவதாக பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார்கள்.
ஆனால் முன்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் சிங்களவர்கள் ஏராளமாக வசித்தார்கள். அங்கு பௌத்த விகாரைகளும் இருந்தன. ஆனால் புலிகள் அவற்றை அழித்துவிட்டார்கள்.
நாம் முன்னர் இருந்த நிலைகளையே கேட்கின்றோம். சிங்கள மக்கள் புதிதான நிலங்களை அபகரிக்கவில்லை. இதை நன்கு அறிந்து கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வெளிநாடுகளில் விசமப் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார்கள்.
எனவே அரசாங்கம் அவர்கள் மீது இரக்கம் காட்டாமல் உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும என்று விசமத் தனமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

0 commentaires :

Post a Comment