கிழக்கு மாகாண சபையின் ஊடாக மேட்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலமைச்சர் சந்திரகாந்தன் மீதான மக்களாதரவு பெருகிவருகின்றதுஅவர்.மாணவர்கள்,உத்தியோகஸ்தர்கள்,விவசாயிகள்,மீனவர்கள்,தொழிலாளர்கள் ----என்று நகரங்கள் தொடங்கி பாதை வசதிகள் கூட இல்லாத குக்கிராமங்களுக்கும் சென்று அவர் மக்களின் குறை தீர்த்து வருகின்றார்.
அதேவேளை முதலமைச்சர் தான் பங்கெடுக்கும் ஒவ்வொரு பொது கூட்டங்களிலும் தமிழ் கூட்டமைப்பினரின் பித்தலாட்டங்களை நன்கே அம்பலப்படுத்தி வருகின்றார்.கூட்டமைப்பினரைப்போல கொழும்பிலோ இந்தியாவிலோ அன்றே வெளிநாடுகளிலோ இருந்து கொண்டு அறிக்கை அரசியல் செய்பவரல்ல தான் என்பதை எடுத்து சொல்லி வருகின்றார்.இதன் காரணமாக பொது மக்கள் கூட்டமைப்பின் ஏமாற்று அரசியலை புரிந்து கொள்ள தொடன்கியுள்ளனர்.
அண்மையில் கூட்டமைப்பினரின் அமெரிக்க பயணம் பற்றி முதலமைச்சர் தெருவித்த கருத்துக்கள்மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் கூட்டமைப்பு மீது வைத்திருந்த நம்பக தன்மையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. போதாக்குறைக்கு பிரதியமைச்சர் முரளிதரனும் இணைந்து கொண்டு கூட்டமைபினரின் யாழ்.மேலாதிக்கவாத வரலாறு பற்றி தெரிவித்த கருத்தானது மட்டக்களப்பு மாவட்டகூட்டமைப்பு எம்பிக்களை பெரும் சிக்கலுக்குள் மாட்டிவிட்டது.
இதன் காரணமாக மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக முதலமைச்சர் மீதும்,பிரதியமைச்சர் மீது சேறடிப்புகளும் வக்கணைகளும் தொடங்கியுள்ளது. மட்டக்களப்பு எம்பிக்களை ஏன் அமெரிக்க சந்திப்புக்களுக்கு கூட்டி செல்லவில்லை என்கின்றகேள்விக்கு பதில் சொல்லல வக்கற்ற கூட்டமைப்பினர் தமது புலிபினாமிகளின் இணையத்தளங்கள் மூலம் வக்கணைகளை அள்ளி வீசியுள்ளனர்.
மட்டகளப்பு மாவட்ட கூட்டமைப்பு கிளை எனும் வெளியாகியுள்ள அறிக்கை கடிதம் எழுதி பழகுவது எப்படி என்கின்ற ஐந்தாம் வகுப்பு பள்ளிமாணவன் ஒருவனின் தரத்தை தாண்டவில்லை. சுமார் அறுபது அனுபவம் மிக்க அரசியல் கட்சியொன்றின் இவ்வறிக்கை கொண்டுள்ள வார்த்தை பிரயோகங்கள் மிகவும் தரந்தாழ்ந்தவை.
கருணாவும் பிள்ளையானும் சொந்த புத்தியற்றவர்கள் என்று கண்டு பிடிப்புகள் வேறு. யாருக்கப்பா சொந்த புத்தியில்லை? பிரபாகரன் இருக்கும் வரை கூட்டமைப்பினர் சொந்தபுத்தியிலா செயல்பட்டீர்கள் அப்போது பொட்டம்மானின் புத்தி,பின்னர் பொன்சேகாவின் புத்தி,இப்போது ராபட் பிளேக்கின் புத்தி. ஏகாதிபத்தியத்தின் ஏஜண்டுகளான கூட்டமைப்பினருக்கு சொந்த புத்தி பற்றி பேச அருகதையில்லை.ஆனால் முதலமைச்சர் சந்திரகாந்தன் உங்களைப்போல் இல்லை எலிவளை ஆனாலும் தனிவளை என்று தனிக்கட்சியை உருவாக்கி உங்களையெல்லாம் மூக்கில் விரலை வைக்கச்செயதவர்.
நூறாண்டு கால யாழ்ப்பாண தலைமைகளால் அல்ல கிழக்குமாகாணத்தானின் சொந்த புத்தியில்தான் உருவானது எமது மக்களுக்கான கிழக்கு மாகாணசபை.அது ஒன்றே இன்று எமது மக்களுக்கான வெளிச்சம். எப்படியோ முதலமைச்சரின் பிரச்சார வேகம் மக்களை விழித்தெழ செய்துள்ளது. இதனுடாக மட்டக்களப்பில் கூட்டமைப்பினர் அண்மைக்காலமாக ஆட்டங்கண்டுவருகின்றனர் என்பதை அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ள கூட்டமைப்பினரின் அறிக்கை சுட்டி காட்டுகின்றது
கு.சாமித்தம்பி
0 commentaires :
Post a Comment