11/25/2011

திருமலையில் ஆசிரியை சடலமாக மீட்பு

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கல்வி லயத்திற்குட்பட்ட தி/பாட்டாளிபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியையான செல்வி குருகுலசிங்கம் சிறிவதனி (33) என்பவரே இன்று காலை பாடசாலைக்கு செல்லும் வழியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டடுள்ளார். தான் வழமைபோல் இன்று காலை பாடசாலைக்கு செல்லும்போதே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளnர்.
குறித்த ஆசிரியர் மூதூர் கட்டை பறிச்சான் 2ம் வட்டாரம் சேர்ந்தவராவார். குறித்த ஆசிரியர் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் இருந்து 2006ம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்ற காலத்திலிருந்து குறித்த பாடசாலையில் வரலாறு பாடம் கற்பித்து வந்திருந்தமை குறிப்பிடத் தக்கது. தற்போது பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்திய சாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டிருக்றது. மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

0 commentaires :

Post a Comment