11/14/2011

இடைத் தேர்தலில் போட்டியிட அவுங் சான் சூச்சி முடிவு

  மியன்மார் தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவர் அவுங் சான் சூச்சி, இடைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார். இதன் மூலம் மீண்டும் அவர் ஜனநாயக அரசியலில் அதிகார பூர்வமாக ஈடுபட முடியும்.
மியன்மாரில் 1990 களில் நடந்த பொதுத் தேர்தலில் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் (என். எல். டி.) கட்சி பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அப்போதைய இராணுவ அரசு, அக் கட்சியினர் பதவியேற் கவிடாமல் தடுத்து, இராணுவ ஆட்சியைத் தொடர்ந்தது.
சூச்சி வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இராணுவ ஆட்சி, அனைத்துக் கட்சிகளும் தங்களை தேர்தலை ஆணையத்தில் பதிவு செய்து கொள்ள வற்புறுத்தியது. மியன்மர் பாராளுமன்றத்தில் தற்போது 40 இடங்கள் காலியாக உள்ளன. எனினும், எப்போது இடைத் தேர்தல், எந்தத் தொகுதியில் சூச்சி போட்டியிடுவார் என்ற விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

0 commentaires :

Post a Comment